சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதியானதும் அவரது அமைச்சரவையில் ரணில் - ரவி - ரிசாத் போன்றோருக்கு வழங்கப்பட போகும் அமைச்சுக்கள் தொடர்பில் விளக்கம் கோரி, அதற்கு பதில் கிடைக்காத நிலையில் தான் சஜித்தின் பிரச்சாரத்தில் பங்கெடுக்கப் போவதில்லையென தெரிவித்த வசந்த சேனாநாயக்க, கோட்டாவுக்கு ஆதரவளித்து மேடையேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் ஒக்டோபரில் இடம்பெற்ற அரசியல் பிரளயத்தின் போதும் பல தடவைகள் கட்சித் தாவலில் ஈடுபட்ட வசந்த, பின்னர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே தங்கிக் கொண்டார்.
எனினும், தற்போது கோட்டாவுக்கு ஆதரவளித்து செயற்படுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment