பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவின் பிணையை மீளாய்வு செய்த உயர் நீதிமன்றம் இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பூஜித ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதுடன் இருவரது வங்கிக் கணக்குகளையும் ஆராயவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் மீளவும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment