மொரட்டுவ, ராவதாவத்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த மூன்று கைக்குண்டுகள் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் பிரதேசத்தில் சற்று நேரம் பதற்றம் நிலவியதோடு தாக்குதல் ஒன்றுக்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இவை முன்னரே கைவிடப்பட்டிருந்த கைக்குண்டுகள் எனவும் காணியொன்றை துப்பரவு செய்யும் போதே கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர். விமானப் படையினர், குறித்த குண்டுகளை செயலிழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment