கோட்டாபே ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரத்தில் இராணுவ தளபதியின் கூற்றும் படமும் இணைக்கப்பட்டிருந்த சர்ச்சை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என தெரிவிக்கிறது பொதுஜன பெரமுன.
இதேவேளை 2009ம் ஆண்டு தான் பேசிய விடயம் ஒன்றையே குறித்த கட்சிக்காரர்கள் தமது அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாக இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார். இதற்கான கடிதம் பாதுகாப்பு செயலாளர் ஊடாக தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த விளம்பரத்துக்கும் தமக்கும் தொடர்பில்லையென பெரமுனவும் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment