![](https://i.imgur.com/ddenMpo.png?1)
தேர்தல் மேடைகளில் பௌத்த பிக்குகள் கலந்து கொண்டு சமய அனுஷ்டானங்களை மேற்கொள்வது தடை செய்யப்பட்டிருப்பதானது அடிப்படை உரிமை மீறல் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
வரலாற்றில் எப்போதுமே பௌத்த துறவிகளின் 'பன' கேட்டு, அன்னதானம் வழங்கியே பௌத்தர்கள் தமது காரியங்களை ஆரம்பிப்பதாகவும் ஆனால் இம்முறை அரசியல்வாதிகள் இவ்வாறு மத விவகாரங்களைக் கலப்பது மற்றும் விகாரைகளில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் இது தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்காள்ளப்படும் உரிமை மீறல் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
கோட்டாபே ராஜபக்சவின் பிரச்சாரக் கூட்டங்களில் மஹிந்த ராஜபக்சவே பிரதான பேச்சாளராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment