பிவித்ரு ஹெல உறுமய கட்சியின் நற்பெயரைக் காப்பாற்றும் நிமித்தமே தான் இராஜினாமா செய்ததாக தெரிவிக்கிறார் மது மாதவ அரவிந்த.
முஸ்லிம் சமூகத்தைப் பற்றித் தான் பேசிய பேச்சுக்களால் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருப்பதாக மத்திய குழு கருதுவதனால் அது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்து பிரதித் தலைவர் பதவி மற்றும் மத்திய குழு உறுப்பினர் பதவியையும் தான் இராஜினாமா செய்திருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
தீவிர முஸ்லிம் எதிர்ப்பு சிந்தனை கொண்ட மது மாதவ கோட்டாபே ஆதரவு பிரச்சாரத்தின் போது முஸ்லிம் சமூகத்தைக் கடுமையாகத் தாக்கி பேரினவாத பேச்சுக்களை பேசியிருந்த காணொளி வெளியானதைத் தொடர்ந்தே இவ்வாறு அவர் பதவி விலகியதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment