ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் - பக்தாதியைக் கொன்று விட்டதாக அறிவித்துள்ளார் டொனால் ட்ரம்ப்.
மூன்று குழந்தைகளுடன் துருக்கி - சிரிய எல்லைக் கிராமமான பரிஷாவில், சுரங்கப் பாதையொன்றில் அகப்பட்டு, கோழையைப் போன்று குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக சற்று முன்னர் ட்ரம்ப் தகவல் வெளியிட்டுள்ளார்.
தான் பதவிக்கு வந்த நாள் முதல் குறித்த நபரைத் தேடி வந்ததாகவும் இணையம் ஊடாக வெற்றிகரமான தீவிரவாத இயக்கமாக குறித்த அமைப்பு வளர்ந்ததாகவும் உலகிலேயே தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி கண்ட அமைப்பாக இருந்ததாகவும் இருப்பினும் தமது படையினர் துல்லியமாக பின் தொடர்ந்து இன்று பக்தாதியைக் கொன்றுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவிக்கிறார்.
பக்தாதி எனும் கதாபாத்திரத்தை அமெரிக்காவே உருவாக்கியதெனவும் உலகளாவிய ரீதியில் எண்ணப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment