அமைச்சர் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் சஹ்ரான் அமர்ந்திருந்ததை பாரிய சம்பவமாக பிரச்சாரம் செய்தவர்கள் கருணாவுக்கும் மஹிந்தவுக்குமிடையில் இருக்கும் ஒப்பந்தம் என்னவென்பதை வெளிப்படுத்துவார்களா என கேள்வியெழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.
பிள்ளையானுடன் அவருக்கு இருக்கும் உறவு மற்றும் அதன் பின்னணியிலும் வெளிப்படுத்தப்படுமா எனவும் மரிக்கார் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து வினவப்பட்ட போதே மரிக்கார் இவ்வாறு பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment