இம்மாதம் 9ம் திகதி முதல் 12ம் திகதி வரை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச முன் வைத்திருந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது நீதிமன்றம்.
இப்பின்னணியில் கோட்டாபே ராஜபக்ச தற்போது உபயோகித்துக் கொண்டிருக்கும் கடவுச்சீட்டும் தற்காலிகமாக அவருக்கு வழங்கப்படவுள்ளது.
டி.ஏ ராஜபக்ச நினைவக நிர்மாணத்தின் போது இடம்பெற்ற முறைகேடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதன் பின்னணியில் கோட்டாவுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் வேட்பு மனுத்தாக்கல் செய்யவும் கடவுச்சீட்டு தேவைப்படுவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment