பிரபல போதைப் பொருள் கடத்தல் பாதாள உலக பேர்வழியான குடு திலீப என அறியப்படும் திலிப் தரங்க ஹெட்டியாராச்சி ஆயுதங்களுடன் வெல்லம்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கூரிய வாள்கள், வெளிநாட்டுத் தயாரிப்பான கைத்துப்பாக்கிகளுடன் குறித்த நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிசாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து வெல்லம்பிட்டியில் நடாத்தப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் இக்கைது இடம்பெற்றதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
No comments:
Post a Comment