வாகனங்கள் பழுதடைந்தாலும் அல்லது தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக நிறுத்தி வைக்க நேர்ந்தாலும் ஏதாவது ஒரு வகையில் ஒருவரை வாகனத்துக்குள்ளேயோ அல்லது அருகிலோ நிறுத்தி வைக்கும்படியும் கை விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.
அண்மையில் மட்டக்குளியில் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தினால் பிரதேசத்தில் பதற்ற நிலை தோன்றியிருந்தது. இப்பின்னணியிலேயே பொலிசார் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தேர்தலும் நெருங்கி வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment