தேசிய அரசியல் சமய அடிப்படையில் மாறிச் சென்றதே நாட்டின் இன்றை பிரச்சினைகளுக்குக் காரணம் என தெரிவிக்கிறார் கெஹலிய ரம்புக்வெல.
கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்து அக்குறணையில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்த அவர், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எம். எச். முஹம்மத், பாக்கீர் மார்க்கார் போன்ற முஸ்லிம் தலைவர்கள் தேசிய அளவில் கௌரவத்தைப் பெற்றவர்களாகவும் தேசிய வளர்ச்சிக்கு பங்களித்தவர்களாகவும் இருந்தார்கள்.
ஆனால், இன்றை நிலையில் பல கூறுகளாகப் பிரிந்துள்ள தேசிய அரசியல் சமய அடிப்படையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் 16ம் திகதி கோட்டாபே ராஜபக்ச வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் அனைத்து தேசிய இனங்களும் ஒன்று பட்டு அவரை ஆதரிக்க வேண்டும் எனவும் கெஹலிய தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-இக்பால் அலி
No comments:
Post a Comment