ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் பெயரில் இயங்கும் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவுத் ஆகியோர் தாம் கோட்டாபே ராஜபக்சவை ஆதரிக்கப் போவதாக செய்திக் குறிப்பு அனுப்பி வைத்துள்ளனர்.
அண்மைக்காலமாக சமூக சர்ச்சைகளை உருவாக்கி வரும் மிப்லால் எனும் நபரின் கட்சியே ஐக்கிய சமாதான கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தான் வாக்குகளை எடுத்து ஜனாதிபதியைத் தீர்மானிப்பதாகத் தெரிவித்து வரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தனது சொந்த ஊரில் ரவுப் மௌலவி தலைமையிலான ஜமாத்தாரின் வாக்குகளை இழந்துள்ளார். ரவுப் மௌலவி இது குறித்து எழுத்து மூலம் விடுத்துள்ள அறிக்கையில் தம்மைச் சார்ந்தவர்கள் சஜித் பிரேமதாசவையே எதிர்வரும் தேர்தலில் ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment