புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்த தென்னந்தோட்டப் பகுதியில் இன்று மீண்டும் திடீர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளது.
சி.ஐடியினர் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றுள்ள அதேவேளை இப்பகுதிக்குள் சந்தேகத்துக்குரியவர்கள் வந்து சென்றதன் பின்னணியிலேயே இப்பரிசோதனை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பின்னணியில் இங்கு இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது ஆயுதங்களுடன் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் பின் குறித்த காணிக்குள் உரிமையாளரைத் தவிர வேறு யாரும் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆயினும், கடந்த வாரம் சந்தேகத்துக்குரிய வகையில் சிலர் உள் நுழைந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவத்தின் பின்னணியிலேயே இன்றைய பரிசோதனை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment