எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.
சஜித் பிரேமதாசவுடனும் தாம் பேச்சுவார்த்தைகள் நடாத்தியதாகவும் ஈற்றில் கோட்டாவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் ஆறுமுகம் தொண்டமான்.
கடந்த ஒக்டோபரிலும் கட்சித் தாவல் ஊடாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஆறுமுகம் தொண்டமான் முன்னதாக சஜித்தை ஆதரிக்கப் போவதாக அவரது கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment