தான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தோ அமைச்சு பதவியிலிருந்தோ விலகப் போவதில்லையெனவும் முடிந்ததால் விலக்கும்படியும் சவால் விடுக்கிறார் வசந்த சேனாநாயக்க.
கடந்த ஒரு வருட காலமாக அதிகமாக கட்சித் தாவலில் ஈடுபட்டு வரும் வசந்த, தற்போது கோட்டா அணியில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், அவரை கட்சியை விட்டு விலக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நேற்றைய தினம் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இப்பின்னணியிலேயே வசந்த தற்போது சவால் விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment