2011ம் ஆண்டு செட்டிக்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் பின்னணியில் கைது செய்யப்பட்ட ரங்கா உட்பட அறுவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
புதன் கிழமை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஒப்படைத்திருந்தனர் பொலிசார்.
இந்நிலையில் வவுனியா நீதிமன்றம் குறித்த நபர்களை, தலா 50,000 ரொக்கம் மற்றும் 2 லட்ச ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment