![](https://i.imgur.com/vZ7J8cN.png?1)
சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையைப் பெற்றுக் கொள்வதற்கான இழுபறியின் தொடர்ச்சியில் இன்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் ஊரின் பள்ளிவாசல் பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள்.
இரு முஸ்லிம் கட்சிகளும் கடந்த தேர்தல்களில் இதற்கான வாக்குறுதியையளித்த போதிலும் தனியான பிரதேச சபை கிடைக்காத நிலையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஊர் சார்பில் சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தமக்கான பிரதேச சபையைப் பெற்றுக்கொள்வதற்கு நேரடியாக மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளதுடன் அதற்குப் பகரமாக தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவை ஆதரிப்பதற்கான வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Rikas T.
No comments:
Post a Comment