தேர்தல் விதிகளை மீறி நேற்றைய தினம் கண்டியில் துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுஜன பெரமுன மாநகர சபை உறுப்பினர் ஒருவர் ஆதரவாளர்களுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் உறுப்பினராக குறித்த நபர், ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் சீர்குலைந்திருப்பதாக விளக்கும் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்துக் கொண்டிருந்த நிலையில், முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றதன் பின்னணியில் பொலிசார் கைது செய்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கைதானவர் கண்டி மாநகர சபையின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment