ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் யார் யாரோ இருப்பதாக அனுமானங்கள் வெளியிடப்படுகின்ற. ஒரு சிலர் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனாலும், அதன் பின்னணியில் இருப்பவர்கள் போதைப் பொருள் வர்த்தகர்களே என தன்னால் உறுதியாக சொல்ல முடியும் என்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
நாட்டின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில் அதனைக் குழப்பும் வகையிலேயே இவ்வாறு ஒரு பாரிய தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாகவும் அதனூடாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மைத்ரி மேலும் தெரிவிக்கிறார்.
போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்கியே ஆக வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்து வந்திருந்த போதிலும் அதற்கு பாரிய அளவில் எதிர்ப்பு உருவாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment