வேட்பு மனு வழங்காதவர்களுக்கு கட்டுப்பணம் திருப்பிக் கிடைக்கும்! - sonakar.com

Post Top Ad

Monday, 7 October 2019

வேட்பு மனு வழங்காதவர்களுக்கு கட்டுப்பணம் திருப்பிக் கிடைக்கும்!


கட்டுப்பணம் செலுத்திய போதிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேர்தலின் பின்னர் கட்டுப்பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.



கோட்டாபேயின் வழக்கு தொடர்பில் சந்தேகம் நிலவிய சந்தர்ப்பத்தில் அவசர அவசரமாக சமல் ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தியிருந்த அதேவேளை, குமார வெல்கம உட்பட ஆறு பேர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் குறித்த ஆறு பேருக்கும் அவர்களது கட்டுப்பணம் திரும்பக் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment