பிரச்சினைகளைக் கண்டு தான் ஒரு போதும் பயந்து ஓடுவதில்லையென தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
யுத்த வெற்றியை ஒரு குடும்பத்தின் சாதனையாக மாற்றி இராணுவத்தின் பின்னால் ஒளிந்திருக்கவோ பிரச்சினைகளைப் பயந்து ஓடவோ தனக்கு எந்த அவசியமும் இல்லையெனவும் தெரிவிக்கின்ற சஜித், பொய்கள் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது எனவும் தெரிவிக்கிறார்.
நாட்டை ஆள்வதற்கு போலி ஹீரோக்கள் அவசியமில்லையெனவும் சஜித் நேற்றைய பொதுக் கூட்டத்தில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment