தாம் ஜனாதிபதியானால் நாட்டில் ஊழல் முற்றாக ஒழியும் என தெரிவிக்கிறார் பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச.
தற்போது நாட்டில் ஊழல் உச்ச நிலையைத் தொட்டுள்ளதாகவும் அதனை இல்லாதொழிக்காது நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் தெரிவிக்கிறார்.
தமது ஆட்சியின் போது ஊழல்கள், அரசியல்வாதிகளின் குற்றங்களைக் கண்டும் காணாமல் இருந்ததாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பின் மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக பல இடங்களில் வைத்து தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment