ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்றைய தினம் இறுதி முடிவையெட்டும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தமக்கு சாதகமான நகர்வை எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கிறது பொதுஜன பெரமுன.
இரு தரப்பும் எட்டுச் சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலம் சின்னத்தை மாற்ற வேண்டும் எனும் சுதந்திரக் கட்சியின் நிபந்தனையை பெரமுன நிராகரித்துள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் கூடும் சு.க சாதகமாகவே முடிவெடுக்கும் என பெரமுன தரப்பு எதிர்பார்க்கிறது.
கட்சிச் சின்னத்தை மாற்றுவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக மஹிந்த ராஜபக்ச ஏலவே விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment