ராஜபக்ச குடும்பத்தில் தொடர்ந்தும் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு 68, 70, 75 என வயதாகி விட்டது எனவும் அவர்களுக்கு நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கம் எதுவும் இல்லையெனவும் தெரிவிக்கிறார் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.
இன்றைய தினம் அவர் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்திருந்த அதேவேளை, மைத்ரிபால சிறிசேனவும் ஏகோபித்த மனதுடன் விரும்பும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவே எனவும் தெரிவித்திருந்தார்.
அதிகார வேட்கையில் தொடர்ந்தும் ஏனையோரை வர விடாமல் தடுத்து வரும் ராஜபக்சக்கள் தமது குடும்ப நலனுக்காக மக்களை வழி கெடுத்து வருவதாகவும் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்வது மக்களின் கடமையனெவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment