இரத்தம் சிந்தி, சிறை சென்று, பலருடன் சண்டையிட்டு, கெட்ட பெயர் சம்பாதித்து வளர்த்தெடுத்த கட்சியை ராஜபக்சவிடம் பறி கொடுத்து விட்டார்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என தெரிவித்துள்ளார் விஜேமுனி சொய்சா.
சு.க உறுப்பினராக இருந்த காலத்தில் தாம் செய்த தியாகங்கள் எதுவும் பலனற்றுப் போயுள்ளதாகவும் அவ்வாறு ஒரு குடும்பத்திடம் கட்சியை ஒப்படைக்க விட முடியாது என்பதாலேயே தம்மால் அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாது போனதாகவும் துமிந்த, அமரவீர போன்றோரை நினைத்தால் தமக்கு கவலையாக இருப்பதாகவும் விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் இடம்பெறும் சஜித் பிரேமதாசவுக்கான பிரச்சார கூட்டத்தில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment