எல்பிட்டிய சஜித்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது: மங்கள - sonakar.com

Post Top Ad

Sunday, 13 October 2019

எல்பிட்டிய சஜித்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது: மங்கள


எல்பிட்டிய பிரதேச சபை முடிவுகள் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவுத் தளம் பெருகியுள்ளதை எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் மங்கள சமரவீர.


அவரது கணக்கின் படி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரதேசத்தில் 59 வீத வாக்குகளை மஹிந்த ராஜபக்ச பெற்றிருந்த அதேவேளை நடந்து முடிந்த தேர்தலில் 56 வீத வாக்குகளையே பெற முடிந்துள்ளமை இதனை எடுத்துக்காட்டுவதாக மங்கள தெரிவிக்கிறார்.

எல்பிட்டிய பிரதேச சபையின் 17 தொகுதிகளிலும் பெரமுன வெற்றி பெற்றிருந்த அதேவேளை ஐ.தே.க ஏழு ஆசனங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment