கோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பில் வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு பகிரங்க மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார் பெரமுன முக்கியஸ்தர் மதுமாதவ.
எக்னலிகொட என்றொருவர் காணாமல் ஆக்கப்பட்டதை வியங்கொட நினைவிற்கொள்ள வேண்டும் என மது மாதவ தெரிவித்துள்ள அதேவேளை தமக்கு தொலைபேசியூடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக குறித்த நபர்கள் தகவல் வெளியிட்டுள்ளதுடன் பொலிசில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் இது குறித்து முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment