கொழும்பு, மட்டக்குளி பகுதியில் கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டிருந்த வாகனம் ஒன்றினால் பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியிருந்தது.
தேவாலயம் மற்றும் பாடசாலையொன்றருகே இவ்வாறு வாகனம் ஒன்று கைவிடப்பட்டுக் காணப்பட்டிருந்ததோடு அதற்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் பொதியொன்றும் இருந்ததாக பிரதேசத்தில் வதந்தி பரவியிருந்ததையடுத்தே இவ்வாறு பதற்றம் நிலவியது.
இந்நிலையில், தொழிநுட்ப கோளாறினால் வாகன உரிமையாளர் அங்கு நிறுத்தி வைத்திருந்ததாக பின்னர் அறியப்பட்டுள்ளதோடு வாகனம் அங்கிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment