முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்ச தீர்க்கதரிசமான தலைவர் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி.
பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் பெரமுன கூட்டம் நேற்றைய தினம் தெஹிவளையில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அத்துடன், கோட்டாபே ஒரு போதும் இனவாத ரீதியாக சிந்திப்பவர் இல்லையெனவும் வடக்கில் யுத்த களத்தில் நின்ற அனுபவமும், அமெரிக்காவில் 10 வருடங்கள் தொழி செய்த அனுபவமும் உள்ளவர் எனவும் அதனால் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவார் எனவும் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
இதேவேளை, பெரமுன அரசு அலி சப்ரிக்கு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என மேல் மாகாண ஆளுனர் முசம்மில் இங்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
-அஸ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment