டி.ஏ ராஜபக்ச நினைவக நிர்மாண முறைகேட்டின் பின்னணியிலான கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் விசாரணையை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் டிசம்பர் 20 வரை அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விசேட உயர் நீதிமன்றம் விசாரணையை ஜனவரி 9ம் திகதி வரை தள்ளி வைத்துள்ளது.
இதேவேளை கோட்டாபே ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமையும் வெற்றி பெறின், நவம்பர் 17 தினமே பதவியேற்கக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment