தனக்கெதிரான போலிக் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள மிப்லால் இப்ராஹிம் எனும் நபர் பெரமுனவின் முகவர் என நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் ரவுப் ஹக்கீம்.
அத்துடன், காத்தான்குடியில் தேர்தலையடுத்து இடம்பெற்ற வன்முறையைப் பார்வையிடச் சென்ற நேரத்தில் எடுக்கப்பட்ட படங்களை பிரசுரித்து தமக்கெதிராக பிரச்சாரம் செய்யும் ஹிரு தொலைக் காட்சி தற்போது முதலில் பதிவிட்ட காணொளியை அகற்றியிருப்பதாகவும் அதற்கான காரணம், தனக்கருகே தற்போதைய காத்தான்குடி பெரமுன அமைப்பாளர் சியாத் அங்கு காணப்படுவதே எனவும் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சஹ்ரானும் சகோதரனும் எதிர்காலத்தில் தற்கொலைதாரிகளாக வருவார்கள் என தான் சாஸ்திரம் பார்த்திருக்க முடியாது எனவும் தெரிவுக்குழுவில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் 2017ம் ஆண்டே குறித்த நபர் தீவிரவாதியாக மாறியிருப்பதாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment