ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவினை வழங்கியதை தொடர்ந்து பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ச புகைப்படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
தேசத்தின் வெற்றி எனும் பெயரில் குறிப்பிட்டு இச்சுவரொட்டிகள் சம்மாந்துறை பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.
இச்சுவரொட்டிகள் யாவும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு திடிரென ஒட்டப்பட்டுள்ள இச்சுவரொட்டிகள் குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இச்சுவரொட்டிகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment