நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இடையே இடம்பெற்ற சந்திப்பில் நடைமுறை அரசியல் விவகாரங்கள் மாத்திரமே பேசப்பட்டது என விளக்கமளித்துள்ளார் தயாசிறி ஜயசேகர.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமா? என்ற கேள்வி நிலவி வருகின்ற நிலையில் நேற்றைய சந்திப்பு இடம்பெற்றிருந்ததுடன் பெரமுனவுடனான பேச்சுவார்த்தை இழுபறிக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் இச்சந்திப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், நேற்றைய சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் குறித்து எதுவும் பேசப்படவில்லையென்றே இரு தரப்பும் தெரிவிககின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment