தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்களன்று விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது கல்வியமைச்சு.
எனினும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு இவ்விடுமுறை வழங்கப்படவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திங்கள் விடுமுறைக்கு மாற்றீடாக பிறிதொரு நாளில் பாடசாலையை நடாத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பது அதிபர்களின் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment