பொத்துவில் விகாரைக்குச் சொந்தமான இடங்களில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் எழுப்புவதாகக் கூறி அப்பகுதி விகாராதிபதி உட்பட சில துறவிகளினால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் நீதிமன்ற உத்தரவையடுத்து முடிவுக்கு வந்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டிட நிர்மாணம் இடம்பெறுவதை நிறுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து பொலிசார் இவ்விவகாரத்தில் தலையிட்டு நிர்மாணப் பணிகளை நிறுத்தியதுடன் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
2000 வருட பௌத்த புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலேயே குறித்த விகாரை அமைந்திருப்பதாகவும் அங்கு பிரதேச மக்கள் தமக்கு விரும்பியபடி காணிகளைப் பிடித்து கட்டிடங்களை எழுப்புவதாகவும் துறவிகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment