புத்தளம்: குழந்தை உட்பட வாகன விபத்தில் மூவர் பலி! - sonakar.com

Post Top Ad

Thursday, 24 October 2019

புத்தளம்: குழந்தை உட்பட வாகன விபத்தில் மூவர் பலி!


புத்தளம் - அநுராதபுரம் வீதி, 4ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.



கட்டுப்பாட்டையிழந்த வேன் ஒன்றே மரத்தில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் அதில் பயணித்த ஆண், பெண் மற்றும் குழந்தையொருவர் உயிரிழந்துள்ள அதேவேளை மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment