படிப்படியாகவே சஜித்தை செப்பனிட்டோம்: ரணில்! - sonakar.com

Post Top Ad

Thursday, 3 October 2019

படிப்படியாகவே சஜித்தை செப்பனிட்டோம்: ரணில்!


தனது தந்தையின் இழப்புக்குப் பின் அரசியலுக்கு வந்த சஜித் பிரேமதாசவை படிப்படியாக செப்பனிட்டே இப்போது ஜனாதிபதி வேட்பாளராக்கியிருப்பதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.



17 வருடங்கள் ஆட்சியிலிருந்த ஐ.தே.க அதை விட அதிக காலம் எதிர்க்கட்சியிலிருந்தே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் ஆட்சியதிகாரத்தை மீண்டும் தவற முடியாது என்பதால் கட்சியின் ஒற்றுமையைக் காப்பாற்றியாக வேண்டிய பொறுப்பு தன் மீது இருப்பதாகவும் இதற்கு முன்னர் ஒற்றுமை சீர்குலைந்த ஒவ்வொரு தருணத்திலும் ஐ.தே.க தோல்வியுற்றது எனவும் ரணில் மேலும் தெரிவிக்கிறார்.

இப்பின்னணியிலேயே, அரசியலுக்கு வந்த சஜித்தை நாடாளுமன்ற உறுப்பினராக்கி, எதிர்க்கட்சியில் அமர வைத்து, அமைச்சராக்கி, கட்சியின் பிரதித் தலைவராக்கி தற்போது ஜனாதிபதி வேட்பாளராகவும் உருவாக்கியிருப்பதாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐ.தே.க மாநாட்டில் வைத்து ரணில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment