சஜித் பிரேமதாசவோ கோட்டாபே ராஜபக்சவோ நாட்டில் அனைவருக்கும் பொதுவான சம நீதியை நிலை நாட்ட மாட்டார்கள் என தெரிவிக்கிறார் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க.
பொத்துவில்லில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், புனிதமான கடமையில் ஈடுபடும் பொலிசாருக்கு அரசியல் இடையூறு இல்லாத சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கேட்கப்படுகின்ற கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பதில் அளிக்கின்ற அல்லது பதில் அளிக்க முடியாமல் திணறுகின்றன 82, 84 வயதை உடைய முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற இந்த பாராளுமன்றத்தில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் வயதை 65 ஆக கட்டுப்படுத்த வேண்டுமெனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-நூருல் ஹுதா உமர்
-நூருல் ஹுதா உமர்
No comments:
Post a Comment