சஜித்துக்கு ஆதரவளிக்க வசந்த 'புதிய' நிபந்தனை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 October 2019

சஜித்துக்கு ஆதரவளிக்க வசந்த 'புதிய' நிபந்தனை!


சஜித் பிரேமதாசவுக்கான தனது ஆதரவைத் தொடர்வதற்கு புதிய நிபந்தனை விதித்தள்ளார் வசந்த சேனாநாயக்க.



இது தொடர்பில் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், ரணில் விக்கிரமசிங்க - ரவி கருணாநாயக்க மற்றும் ரிசாத் பதியுதீனுக்கு சஜித்தின் அமைச்சரவையில் வழங்கப்படப் போகும் பதவிகள் என்னவென்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கான பதில் திருப்திகரமாக இருந்தால் மாத்திரமே தான் ஆதரவளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் ஆட்சி மாற்றத்தின் போதும் வசந்த சேனாநாயக்க அங்கும் இங்கும் மாறி மாறிக் கட்சித் தாவலில் ஈடுபட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment