இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் யாழ்ப்பாணத்தில் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரச விமான நிறுவனனமான எயார் இந்தியாவின் கிளை நிறுவனம் அலயன்ஸ் விமான சேவை இன்று காலை சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்து இரு நாடுகளுக்கிடையிலான விமான சேவையையும் ஆரம்பித்து வைத்துள்ளது.
36 வருடங்களுக்குப் பின் யாழ் விமான நிலையம் செயற்பட ஆரம்பித்துள்ளதுடன் தற்போது அது சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment