ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிமித்தம் நாளை திங்கட் கிழமை தேர்தல் ஆணைக்குழு இருப்பிடத்தை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில் திங்களன்று வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் சுமார் 1200 பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் காலை 6 மணி முதல் வெலிகடை பகுதியிலிருந்து விசேட போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment