மஹிந்த ராஜபக்ச நிறுத்தியிருக்கும் கோட்டாபே ராஜபக்ச வெற்றி பெற்றால் நாட்டின் நிலைமை பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாகத் தான் இருக்கும் என தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.
இன்றைய தினம் ஏறாவூரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், எந்தவொரு மாற்றமும் இல்லாத அந்த பழைய நிலைமையையே விரும்புகிறவர்கள் கோட்டாவுக்கு வாக்களிக்கலாம், அவர் ஜனாதிபதியானால் யார் பிரதமர் என்பதும் யாரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதும் சகலரும் அறிந்த விடயமே. ஆதலால் பழைய நிலைமையை விரும்புகிறவர்கள் வாக்களிக்கலாம் என தெரிவித்தார்.
அத்துடன், சஜித் பிரேமதாசவைத் தமது கட்சி ஆதரிப்பதானது ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாகாது, நாட்டுக்கு புதிய உத்வேகத்தைத் தரக்கூடிய புதிய தலைமையை ஆதரிப்பதாகும் எனவும் அதற்காக தமது கட்சியே முந்திக் கொண்டு பாடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment