ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகியிருப்பவர்கள் தன்னோடு இணைந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச விடுத்திருந்த அழைப்பை ஏற்று தொடர்ச்சியாக பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் சஜித்துக்கு தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியில் முன்னாள் அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன, மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் ஏக்கநாயக்க ஆகியோர் இன்று சஜித்துக்கான தமது ஆதவை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் தம்மை ஆதரிப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக சஜித் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment