கோட்டாவுடன் கை கோர்த்த தயாசிறிக்கு சந்திரிக்கா கடிதம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 10 October 2019

கோட்டாவுடன் கை கோர்த்த தயாசிறிக்கு சந்திரிக்கா கடிதம்!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பலவீனமடைந்திருப்பது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதனால் இல்லை, மாறாக மஹிந்த ராஜபக்சவின் சூழ்ச்சிகளுக்குள் மைத்ரிபால சிக்கிக் கொண்டு கையாலாகாத நிலைக்குச் சென்றதுவே என தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா.


இந்நிலையில், கோட்டாவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை கோர்த்துள்ளமை எந்த வகையில் ஏற்புடையது என தயாசிறியிடம் கேள்வியெழுப்பியுள்ளார் சந்திரிக்கா.

நீண்ட  பேச்சுவார்த்தையின் பின் எதுவித நிபந்தனையுமின்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரமுன வேட்பாளரை ஆதரித்துள்ளதுடன் பிரச்சார நடவடிக்கைகளிலும் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment