தீவிரவாதிகள், கொலை காரர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளார் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.
சமய மற்றும் நவீன தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லதொழிக்கும் நிமித்தம் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்களுக்கு அதற்கான முழு அதிகாரமும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் நேற்று ரக்வானயில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்து சஜித் தெரிவித்திருந்தார்.
போதைப் பொருளை இல்லாதொழிப்பதன் நிமித்தம் மரண தண்டனையை அமுல் படுத்தியே ஆக வேண்டும் என அண்மைக்காலமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்து வந்தமை நினைவூட்டததக்கது.
No comments:
Post a Comment