கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலை வென்றதும் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
மஹிந்தவைப் பிரதமராக்குவதற்கான நாடாளுமன்ற பெரும்பான்மை தற்போது ஏற்பாடாகியிருப்பதாக தெரிவிக்கும் அவர், தேர்தல் முடிந்ததும் ஆட்சி மாற்றம் வரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, சஜித் பிரேமதாச வென்றதும் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என ஐ.தே.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment