இம்முறை 35 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் அதில் பலர் பினாமி வேட்பாளர்கள் என தெரிவிக்கிறார் மஹிந்த தேசப்பிரிய.
குறிப்பிட்ட வேட்பாளர் ஒருவர் தமக்கு ஆதரவாக ஐவரைக் களமிறக்கியுள்ளதாகவும், இன்னுமொருவர் மூவரை போட்டியிட வைப்பதாகவும், மேலும் இருவர் மறைமுகமாக ஒரே வேட்பாளரை ஆதரித்து கருத்து வெளியிட்டு வருவதாகவும் தேசப்பிரிய தெரிவிக்கிறார்.
தேர்தல் பிரதிநிதிகளை அறிவிக்கும் போது நான்கு வேட்பாளர்கள் ஒரே உறையில் தமது கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் இது தொடர்ந்தால் குறித்த நபர்களை அம்பலப்படுத்த வேண்டி நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment