நானும் தஹம் பாசல் (ஞாயிறு பாடசாலை) சென்று புத்த தர்மத்தைக் கற்றவன் தான், ஆனாலும் புத்தர் ஏனைய மத வழிபாட்டுத் தளங்களை உடைக்குமாறு ஒரு போதும் எங்கும் சொல்லவில்லையென தெரிவிக்கிறார் ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.
நேற்றைய தினம் ரமடா ஹோட்டலில் இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், தந்தையின் வழியைப் பின்பற்றி அனைத்து மதங்களையும் மதிக்கும் வழக்கத்தைத் தான் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இப்போது அமைச்சராக இருந்த போதிலும் சொந்த வீட்டில் இருந்து கொண்டே செயற்படுவது போன்றே ஜனாதிபதியானாலும் அரச சொத்துக்களை வீண் விரயத்துக்குள்ளாக்கப் போவதில்லையெனவும் தொடர்ந்தும் தமது ஊதியத்தை இளைஞர் அபிவிருத்தி விவகாரங்களுக்காக செலவு செய்ய உள்ளதாகவும் சஜித் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-அஸ்ரப் ஏ. ஸமது
-அஸ்ரப் ஏ. ஸமது
No comments:
Post a Comment