தமிழ்நாடு, சோளக்காட்டு பகுதியில் மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணறொன்றுக்குள் வீழ்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக இருந்த இரண்டு வயது குழந்தை குழந்தை சுர்ஜித் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தமிழ்நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் அவ்வப் போது நடந்து வரும் தொடர்ச்சியில் சுர்ஜித்தின் மரணம் நிகழ்ந்துள்ளதுடன் இம்முறை பெருமளவு ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தையும் இச்சம்பவம் ஈர்த்துள்ளதன் பின்னணியில் அருகிலிருந்த இவ்வாறான 600 ஆழ் துளை கிணறுகள் இப்போது கொங்கிரீட் கொண்டு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வில்சன்-கலாமேரி தம்பதியின் குழந்தை சுர்ஜித்தின் உயிரிழப்பு தமிழ்நாட்டில் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment